தமிழகம்

மணல் கடத்தல்காரர்கள் மீது வலுவான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யவதில்லை:  உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

கி.மகாராஜன்

மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது வலுவான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வதில்லை என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

கரூர் புஞ்சை கடம்பன்குறிச்சியைச் சேர்ந்த மாதவன், புஞ்சை கடம்பன்குறிச்சி, தளவாய்பாளையம் கிராமங்களில் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. கரூர் காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது வலுவான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை

. தினமும் 5 முதல் 6 மணல் கடத்தல் வழக்குகள் விசாரிக்கிறோம். இதில் அதிக வழக்குகள் சிவகங்கை, கரூர் மாவட்டங்களிலிருந்து தாக்கலாகின்றன என்றனர்.
பின்னர், மனு தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

SCROLL FOR NEXT