தமிழகம்

பிள்ளையார்பட்டி கோயில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை: யூடியூப் சேனல் மூலம் பார்க்க ஏற்பாடு

இ.ஜெகநாதன்

கரோனா ஊரடங்கால் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கோயிலில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை என்றும், விழா நிகழ்வுகளை யூடியூப் சேனல் மூலம் பார்க்கலாம் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் 10 நாட்கள் விமர்சியாக நடக்கும். தற்போது கரோனா ஊரடங்கால் கோயில் விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தாண்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம் ஆக.13-ம் தேதி எளிமையாக நடந்தது.

தொடர்ந்து நாள்தோறும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தன.

இந்நிலையில் ‘நாளை நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்றும், விழா நிகழ்வுகளை pilayarpatti temple official என்ற யூடியூப் சேனல் முகவரி மூலம் பார்க்கலாம் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT