சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, மார்க்சிஸ்ட் உறுப்பினர் சவுந்திரராஜன், பாக்ஸ்கான் மூடப்பட்டது குறித்து பேசினார்.
அதற்கு பதிலளித்த தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி, “2010ல் தொழிலாளர்கள் போராட்டத்தின் போது, தொழிற் சாலைக்குள் நுழைந்து அங்குள்ள ‘மோல்டு’ ஒன்றை சேதப்படுத்தி விட்டனர். தொழிலாளர்கள் அறவழியில் போராட்டம் நடத்தி யிருக்க வேண்டும். தொழிற் சாலையை மீண்டும் திறக்க அந்த நிறுவனத்தை கேட்ட போது, அவர்கள் இதைதான் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.