கோவை மாவட்டம் சூலூரில்,மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்மேற்கொள்ளப் பட்டுவரும் திட்டப்பணிகளை, ஆட்சியர் கு.ராசாமணி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மாவட்டதலைவர் மாணிக்கம் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார்.
அவர் முகக்கவசம் அணியாததைப் பார்த்து கோபமடைந்த ஆட்சியர் கு.ராசாமணி, ‘முகக்கவசம் அணியாமல் மனு கொடுக்க வந்து இருக்கீங்க. முகக்கவசம் அணிந்து கொண்டு வாங்க’என அறிவுறுத்தினார். உடனே மாணிக்கம், முகக்கவசம் காரில் இருப்பதாகக் கூறி, தனது வேட்டியை எடுத்து மூக்கு, வாய்ப் பகுதியில் வைத்து மறைத்தார். சிறிது நேரத்தில் முகக்கவசம் அணிந்து வந்து, ஆட்சியரிடம் மனு அளித்தார்.