சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரைச் சேர்ந்த திமுக மாணவரணி நிர்வாகி சங்கர். இவர், காரைக்குடியில் பெண்கள் ஹாக்கி கிளப் நடத்தி வருகிறார். இவரிடம் காரைக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வரும் 15 வயது மாணவி மற்றும் அவரது சகோதரியான 14 வயது மாணவி பயிற்சி பெற்று வந்தனர். இவ்விருவருக்கும் சங்கர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் பள்ளி முதல்வரிடம் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தேவகி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சங்கரை கைது செய்தார். சங்கருக்கு உடந்தையாக இருந்ததாக உதவியாளர் கண்ணனையும் கைது செய்தார்.