தமிழகம்

‘நீட்’ தேர்வு அச்சத்தால் கோவை மாணவி தற்கொலை

செய்திப்பிரிவு

கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி சாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் சுபஸ்ரீ(19). சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் படித்த இவர், கடந்த ஆண்டு 451 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்திருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக 'நீட்' தேர்வுக்காக, தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.

கரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு, செப்டம்பரில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. தேர்வு அச்சத்தால், மாணவி சுபஸ்ரீ மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் வீட்டில்தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் தற்கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்டாலின், கனிமொழி

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நீட் தேர்வு குறித்த அச்சத்தால் அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஸ்ரீ வரை தொடர்கிறது. அரசே நடத்தும் கல்விக் கொலைகள் இவை. சுபஸ்ரீயின் பெற்றோரிடம் பேசி ஆறுதல் கூறினேன். இந்த மரணத்துக்கு மத்திய - மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பதிவில், “நீட் தேர்வு அளிக்கும் மன அழுத்தம் தாங்காமல்,மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. கரோனாவால் இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT