தமிழகம்

அமைச்சரின் உதவியாளர் எனக் கூறி மோசடி செய்தவர் கைது: அரசு பணிக்கு போலி நியமன கடிதம் கொடுத்து பல லட்சம் வசூல்

செய்திப்பிரிவு

அமைச்சரின் உதவியாளர் எனக் கூறி மோசடியில் ஈடுபட்ட அரசு ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை யைச் சேர்ந்த ராஜ் மகன் சுந்தர் ஜெயசீலன்(25). சென்னை நந்தனத்தில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலகத்தில், அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

இவர், திருச்சி காட்டூர் பாலாஜி நகரைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான கமலதாஸிடம்(38), தன்னை வேளாண்மைத் துறை அமைச்சரின் உதவியாளர் எனக்கூறி அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 2014-ம் ஆண்டு கமலதாஸிடம் இருந்து ரூ.8.5 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால், கூறியபடி வேலை வாங் கித் தரவில்லை. இதையடுத்து கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட கமலதாஸை, சுந்தர் ஜெய சீலன் மிரட்டியுள்ளார்.

இதுபற்றி தில்லை நகர் போலீஸில் கமலதாஸ் புகார் செய் தார். அதன்பேரில் மோசடி, கொலை மிரட்டல் உட்பட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார், சுந்தர் ஜெயசீலனை கைது செய்தனர். அவருக்கு உடந்தை யாக இருந்த மணப்பாறையைச் சேர்ந்த தினகரன் (23), நடேசன் (24) ஆகியோரையும் நேற்று கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸார் கூறும் போது, “தந்தை இறந்ததால் கருணை அடிப்படையில் சுந்தர் ஜெயசீலனுக்கு வேலை கிடைத்துள்ளது. பிளஸ் 2 படித் துள்ளார். சென்னையில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றியதால், அங்கு அரசு பணி உத்தரவு கடிதம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை தெரிந்துகொண்டுள்ளார். அரசு வேலைதேடும் இளைஞர் களைக் குறிவைத்து, அவர்களிடம் தன்னை அமைச்சரின் உதவியாளர் எனக்கூறிக்கொண்டு லட்சக் கணக்கில் வசூல் செய்துள்ளார்.

தனது நண்பர்கள் உதவியால், கம்ப்யூட்டர் மூலம் அரசு முத்தி ரையுடன் போலி பணி உத்தரவு கடிதங்களை தயாரித்து பலருக்கு கொடுத்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. கணினிகள், போலி அரசு முத்திரைகள், ஆவ ணங்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

SCROLL FOR NEXT