தமிழகம்

கூட்டுறவு கடன் சங்கங்கள் ரூ.6 ஆயிரம் கோடியில் புதுப்பிப்பு: அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்

செய்திப்பிரிவு

தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறையின் செயல்பாடுகள், அறிவிக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து துறை உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் செல்லூர் கே.ராஜு ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் அவர் பேசும்போது, “பிரதமர் அறிவித்த வேளாண்மை உள்கட்டமைப்பு திட்டத்தில், தமிழகத்துக்கு நபார்டு வங்கி ரூ.6 ஆயிரம் கோடியை வழங்குகிறது. இந்த நிதியில் மாநிலத்தில் உள்ள 4,449 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை 3 ஆண்டுகளில் புதுப்பித்து, நவீனமயமாக்கி, சுற்றுச் சுவரும் கட்டப்படும்.

இவைதவிர, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 6 சதவீத வட்டியில் கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது ’’ என்றார்.

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கூடுதல் கடன் வழங்குதல் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவு துறை செயலர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT