தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் 71-வது குழுமக் கூட்டம் அந்நிறுவனத்தின் தலைவரும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், தகவல் தொழில்நுட்பவியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் தலைமை செயல் அலுவலர் மற்றும் மின்ஆளுமை ஆணையர் சந்தோஷ் கே.மிஸ்ரா, தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.விஜயகுமார், அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் பொ.சங்கர், நிதித் துறை இணை செயலாளர் எம்.அரவிந்த் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 
தமிழகம்

உடுமலைப்பேட்டையில் ரூ.256 கோடியில் கால்நடை மருத்துவ கல்லூரி, ஆராய்ச்சி நிலையம்: ஒப்புதல் வழங்கிய முதல்வருக்கு அமைச்சர் ராதாகிருஷ்ணன் நன்றி

செய்திப்பிரிவு

உடுமலைப்பேட்டையில் ரூ.255 கோடியே 87 லட்சத்தில் கால்நடைமருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படுவதாக அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள பண்ணைக் கிணறு கிராமத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கவும், இளநிலை மருத்துவப் படிப்பில் ஆண்டுக்கு 80 மாணவர்களை சேர்க்கவும் அரசுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி, ‘‘உடுமலைப்பேட்டையில் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இந்த ஆண்டேதொடங்கப்படும்’’ என அறிவித்தார்.

அதை அமைக்க முதல் கட்டமாக ரூ.94 கோடியே 72 லட்சத்து 68 ஆயிரம் நிதியை தமிழக அரசுஒதுக்கியுள்ளது. மேலும், முதல்கட்டமாக இளநிலை மருத்துவ படிப்பில்40 மாணவர்களை சேர்க்கவும் அதன்பின், எண்ணிக்கையை 80 ஆக உயர்த்தவும் அறிவுறுத்தி அரசாணை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, நேற்று முதல்வர் பழனிசாமியை சந்தித்த, தமிழக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்கியதற்காக நன்றி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT