தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்து முதல்வர் வெளியேற்ற வேண்டும்: மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தல்

கி.மகாராஜன்

ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் போராட்ட வழக்கில் கைதான மக்கள் உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் , ஸ்டெர்லைட் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

மதுரையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது.

வேதாந்தா குழுமத்தின் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது.

தூத்துக்குடி மக்களின், உலகத் தமிழர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, உயிர் நீத்தவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த தீர்ப்பு எனவும், மக்கள் போராட்டம் நியாயமானது என்பதை தீர்ப்பு சொல்லியிருக்கிறது.

த்மிழக முதல்வர் ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்தே வெளியேற்ற வேண்டும்.

தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்யக்கூடாது, வேதாந்த நிறுவனம் மேல்முறையீடு செய்தால் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டும். தெளிவான வாதங்களை முறையீடுகளை செய்ய வேண்டும்.

தூத்துக்குடி தீர்ப்பு குறித்து ரஜினிகாந்த் பதில் சொல்வாரா?" என்றார்

SCROLL FOR NEXT