தமிழகம்

சாத்தான்குளம் விவகாரம்: மதுரையில் மீண்டும் விசாரணையைத் தொடங்கிய சிபிஐ  

என்.சன்னாசி

சாத்தான்குளம் வழக்கை விசாரித்த சிபிஐ குழுவினருக்கு கரோனா பாதித்த நிலையில், சிகிச்சைக்குப் பின், மீண்டும் வழக்கு விசாரணையைத் தொடங்கியதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கல் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 பேரை சிபிஐ கைது செய்தது.

ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து, மதுரை சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். இதற்கிடையில், சிபிஐ குழுவைச் சேர்ந்த சச்சின், அபய்குமார் உள்ளிட்ட 6 அதிகாரிகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆய்வாளர் உள்ளிட்ட 10 பேருக்கும் மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் சிறப்பு எஸ்ஐ பால்துரை, காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகியோருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மூவரும் அடுத்தடுத்து மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பால்துரை சிகிச்சை பலனின்றி கடந்தவாரம் உயிரிழந்தார்.

முத்துராஜ், முருகன் ஆகி யோர் குணமடைந்து மீண்டும் மதுறை சிறையில் அடைக்கப் பட்டனர். இதனிடையே கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சிபிஐ அதிகாரிகள் குணமடைந்த நிலையில், அவர்கள் மீண்டும் சாத்தான்குளம் வழக்கு விசாரணையை துவங்கி இருப்பதாக சிபிஐ தரப்பில் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT