தமிழகம்

கரோனா ஊரடங்கால் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை: மீறினால் நடவடிக்கை என போலீஸ் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

கடந்த 144 நாட்களில் கரோனா ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்களின் மீது 8 லட்சத்து 77ஆயிரத்து 263 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 20 கோடியே 61 லட்சத்து 71 ஆயிரத்து 348 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

மேலும், வரும் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கூடுவதை தடுக்க, விநாயகர் சதுர்த்தி தினத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறி சிலைகள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

SCROLL FOR NEXT