சென்னை தண்டையார்பேட்டை வஉசி நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் (28) என்பவர் மீது 3 கொலை வழக் குகள் உள்ளன. ஈஸ்வரன் சார்பில் 3 வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் காமேஷ் (34) நடத்தி வந்தார்.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி மதியம் காமேஷ், ஈஸ்வரன் இருவரும் விழுப்புரம் சென்றுள் ளனர். அன்றிரவு மரக்காணம் அடுத்த சூணாம்பேடு பகுதியில், வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் காமேஷ் உயிருக்கு போராடியுள்ளார். அவரை மீட்டு சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
‘கொலை செய்யும் நோக்கில் சுடவில்லை. துப்பாக்கியை தூக்கி எறியும்போது அதை பிடித்த காமேஷ் மீது குண்டு பாய்ந்து விட்டது’ என்று ஈஸ்வரன் தொடர்ந்து கூறி வருகிறார். இதனால் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. எந்த கோணத்தில் விசாரிப்பது என தெரியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
ஈஸ்வரன் அழைத்ததின் பேரில்தான் காமேஷ் அவருடன் சென்றுள்ளார். வயிற்றில் பாய்ந்த குண்டு சிறுநீரகத்தை மேலிருந்து கீழாக துளைத்த மாதிரி சென்றுள்ளது. அவரை கொல்ல வேண்டும் என்ற நோக்கில் மிகச் சரியாக சிறுநீரக பகுதியைப் பார்த்து சுட்டிருக்கலாம்.
மற்றொரு வழக்கறிஞர் செல்வத்தின் உடலில் சில காயங்கள் உள்ளன. அதற்கான காரணம் என்ன, சம்பவ இடத்துக்கு அவர் எப்படி வந்தார் என்பது குறித்து அவர் சரியான விளக்கம் கொடுக்கவில்லை. எனவே, காமேஷை திட்டமிட்டு கொலை செய்திருப்பதற்கான ஆதாரங்கள் அதிகமாக உள்ளன. கொலைக் கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். என்கின்றனர் போலீஸார்.