தமிழகம்

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் இன்று சதுர்த்தி விழா கொடியேற்றம் நடைபெற்றது.

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் விமர்சியாக நடைபெறும்.

தற்போது கரோனா ஊரடங்கால் கோயில் விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஆக. 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது.

இதையடுத்து பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் இன்று காலை பக்தர்களின்றி சதுர்த்தி விழா கொடியேற்றம் நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் திருவிழாவையொட்டி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கோயில் வளாகத்திலேயே நடைபெறவுள்ளது.

SCROLL FOR NEXT