காரைக்குடியில் ஓட்டல் உரிமையாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் கூடு கட்டி குடியேறிய கரிச்சான் குருவி.(வலது) குருவி கூட்டை பாதுகாக்க மோட்டார் சைக்கிளில் துணி கட்டப்பட்டுள்ளது. 
தமிழகம்

கரிச்சான் குருவி அடை காக்க ‘பைக்’: காரைக்குடியில் ஓட்டல் உரிமையாளரின் கரிசனம்

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கரிச்சான் குருவி அடைகாத்து குஞ்சு பொறிப்பதற் காக ஓட்டல் உரிமையாளர் ஒருவர், தனது மோட்டார் சைக்கிளை ஒன்றரை மாதமாக எடுக்காமல் இருக்கிறார்.

நாமக்கல்லைச் சேர்ந்தவர் கோபால் (37). இவர் தனது நண்பர் களுடன் சேர்ந்து காரைக்குடியில் ஓட்டல் வைக்க ஏற்பாடு செய்து வருகிறார். இதற்காக ராம் நகரில் உள்ள உதயம் நகரில் வாடகை வீட்டில் வசிக்கிறார். ஊரடங்கு காலத்தில், அவர் தனது பைக்கை வாரத்துக்கு ஒருமுறை மட்டும் எடுத்துள்ளார்.

அப்போது அவரது மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் கரிச் சான் குருவி கூடு கட்டியது. அதை கலைக்க மனமின்றி அப்படியே விட்டு விட்டார். அந்தக் குருவி மூன்று முட்டைகள் இட்டு அடை காத்தது. மேலும் குருவிக் கூட்டை மற்ற பறவைகள் சேதப்படுத்தாமல் இருக்கக் கூட்டின் மேற்புறம் துணியை அவர் கட்டினார். அவற்றை கண்காணித்தும் வந்தார். குருவி தண்ணீர் குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளுக்கு அருகிலேயே தின மும் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கிறார். இதனால் எந்த இடையூறுமின்றி, குருவி முட்டைகளை அடைகாத்து 2 நாட் களுக்கு முன்பு 3 முட்டைகளிலும் இருந்து குஞ்சுகள் பொறித்தது.

குருவியையும், அதன் குஞ்சுகளையும் பாதுகாக்க, அவர் ஒன்றரை மாதமாக தனது மோட்டார் சைக்கிளை எடுக்காமல் கடைகளுக்கு நடந்தே சென்று வருகிறார். இதை அறிந்த அப்பகுதியினர் அவரை பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து கோபால் கூறுகை யில், ‘ஓட்டல் வைக்கத்தான் காரைக் குடி வந்தோம். ஊரடங்கால் பணி கள் தாமதமானது. மோட்டார் சைக் கிளில் குருவி கட்டிய கூட்டைக் கலைக்க மனமில்லை. குஞ்சுகள் இறக்கை முளைத்து பறந்ததும் மோட்டார் சைக்கிளை எடுக்க உள்ளேன்' என்றார்.

SCROLL FOR NEXT