தமிழகம்

திமுக பல சரிவுகளை சந்திக்கும்: மு.க. அழகிரி கருத்து

செய்திப்பிரிவு

திமுகவில் பதவிதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. வருகிற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக சரிவை சந்திக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கு.க.செல்வம் திடீரென புதுடெல்லி சென்று பாஜக தேசிய தலைவரை சந்தித்து பேசினார்.

இதனால் திமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்த சூழ்நிலையில், மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நேற்று ஒரு தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார்.

அதில், "திமுக மூத்த நிர்வாகிகள் விரைவில் அக்கட்சியில் இருந்து வெளியேறுவர். அதற்கு பதவி மட்டும் காரணம் அல்ல. வேறு பல காரணங்கள் இருக்கின்றன. இப்போதே இப்படி இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு மேலும் பல சரிவுகளை திமுக சந்திக்கும்" என மு.க. அழகிரி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT