தமிழகம்

அரசு மருத்துவமனைகளில் திருட்டை தடுக்க குழந்தைகள் கையில் ரேடியோ அதிர்வு பட்டை: அரசுக்கு உயர் நீதிமன்றம் யோசனை

செய்திப்பிரிவு

அரசு மருத்துவமனைகளில் குழந் தைகள் திருடப்படுவதை தடுக்க, குழந்தைகளின் கையில் ரேடியோ அதிர்வு அடையாள பட்டை கட்ட லாம். இது தொடர்பாக சுகாதார துறை செயலர் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவமனை யில் காணாமல்போன மதுரை பொம்மனன்பட்டியைச் சேர்ந்த மீனாட்சியின் ஆண் குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரிய வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை அரசு மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை, குழந்தைகள் திருட்டு நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக வழக்கறிஞர்கள் ஆணையர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதை அரசு மருத்துவமனை டீன் ரேவதி மறுத்தார். அவர் தாக் கல் செய்த பதில் மனுவில், தகாத உறவில் பிறக்கும் குழந்தைகளை விற்பனை செய்துவிட்டு திருடப் பட்டதாக நாடகம் ஆடுகின்றனர் எனக் கூறியிருந்தார்.

அப்போது, குழந்தைகள் திருட்டு நடைபெறுவதை தடுக்க ரேடியோ அதிர்வு அடையாள (ரேடியோ ஃப்ரிக்குவன்சி ஐடன்டிஃ பிகேசன்) முறையை அமல்படுத்த மகாராஷ்டிரா மாநிலத்தில் பரிந் துரை செய்யப்பட்டுள்ளது. அந்த முறையை மதுரையில் முதல் முறை யாக அமல்படுத்தலாம் என நீதி பதிகள் யோசனை தெரி வித்தனர்.

இதையடுத்து மாநில சுகா தாரத் துறை செயலர், மதுரை ஆட்சியர், டீன், மதுரை மாநகர் காவல் ஆணையர் ஆகியோர் அக்.10-ம் தேதிக்குள் ஆலோ சனை செய்து அரசு மருத்துவ மனைகளில் ரேடியோ அதிர்வு அடையாள முறையை அமல்படுத் துவது, மதுரை அரசு மருத்துவ மனையின் தரம், பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகியவை குறித்து முடிவெடுத்து நீதிமன்றத் துக்கு தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தலா ரூ.3 லட்சம் இழப்பீடு

தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில் திருடப்பட்டு இது வரை கண்டுபிடிக்கப்படாத 9 குழந் தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மனுதாரர் மீனாட்சியின் குழந் தையை தேடி வருவதாகவும் இருப் பினும் கண்டுபிடிக்க முடிய வில்லை என்றும் சிபிசிஐடியினர் தெரிவித்தனர். ஏற்கெனவே 9 குழந்தைகள் மாயமான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஆர்.அழகுமணி கேட்டுக்கொண்டார்.

          
SCROLL FOR NEXT