தமிழகம்

இ- பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்: இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை

இ.மணிகண்டன்

தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.

கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். நகரத் தலைவர் லட்சுமணன், மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. அணித் தலைவர் ஜோதிமணி, பொதுக்குழு உறுப்பினர் வேணுகோபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்துசெய்ய வேண்டும். கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அறிவிப்பில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்.

ஆன்-லைன் மூலம் ஏழைமாணவர்களும் கல்வி கற்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச இணையதள சேவை வழங்க வேண்டும். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT