தமிழகம்

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் பான்ட்ரா, வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பான்ட்ராவில் (மகாராஷ்டிரம்) இருந்து இன்று இரவு 10.50க்கு புறப்படும் சிறப்பு ரயில் (09003) அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக வரும் 8-ம் தேதி வேளாங்கண்ணியை சென்றடையும். வேளாங்கண்ணியில் இருந்து 9-ம் தேதி இரவு 12.45க்கு புறப்படும் சிறப்பு ரயில் (09004) 10-ம் தேதி மாலை 6.50 மணிக்கு பான்ட்ரா ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை (6-ம் தேதி) தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT