தமிழகம்

பிரணாப் முகர்ஜி பூரண குணமடைய முதல்வர், தலைவர்கள் வாழ்த்து, பிரார்த்தனை

செய்திப்பிரிவு

முன்னாள் குடியரசுத் தலைவர்பிரணாப் முகர்ஜி உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ளராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதோடு கரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவர் பூரண குணமடைய வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைய வாழ்த்துவதுடன், அதற்காக எல்லாம் வல்ல இறைவனையும் பிரார்த்திக்கிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பிரணாப் முகர்ஜிக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதுடன், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் விரைவில் குணமடைவீர்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து விரைவாக மீண்டு, முழு உடல்நலம் பெற வாழ்த்துகிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பிரணாப் முகர்ஜி விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT