மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை அளவு குறைந்து இயல்பு நிலை திரும்பும் என்றும், தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய செய்திக் குறிப்பு:
“தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த மாவட்டங்கள்:
தேவாலா (நீலகிரி) சின்னகல்லார் (கோவை) 4 செ.மீ, வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் (கோவை) வால்பாறை பரம்பிக்குளம் (கோவை) 3 செ.மீ. வால்பாறை (கோவை), சோலையார் (கோவை) சின்கோனா (கோவை) அவலாஞ்சி (நீலகிரி) தலா 2 செ.மீ, தக்கலை (கன்னியாகுமரி) பெரியாறு (தேனி), மேல் பவானி (நீலகிரி) 1 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
ஆகஸ்ட் 11 முதல் 15 வரை தென் மேற்கு மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்கண்ட பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் அலை முன்னறிவிப்பு:
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஆகஸ்ட் 12 இரவு 11-30 மணிவரை கடல் அலை 3.5 முதல் 3.8 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.