விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று (ஆகஸ்ட் 10) 10 ஆயிரத்தைக் கடந்தது.
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 193 பேர் கரோனா தொற்றுக்கு ஆளானார்கள். மேலும், நேற்று முன்தினம் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்தனர்.
அதைத்தொடர்ந்து, கரோனா வைரஸ் தொற்றால் இன்று 84 பேர் பாதிக்கப்பட்டனர்.
அதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,050 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 134 பேர் உயிரிழந்துள்ளனர்.
8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். சுமார் 1,800 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.