தமிழகம்

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சிக்கு ரூ.56,914 கோடி ஒதுக்கீடு

வீட்டு வசதித் துறைக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறைகளுக்கு ரூ.56,914 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5,300 கோடி ஒதுக்கப்பட்டு 1026 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இதுவரை 1227 பணிகள் ரூ.2,491 கோடியில் எடுக்கப்பட்டு, அவற்றில் 1123 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.

          

தொழில் முனைவோரும், மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் ரூ.104 கோடியில் 30 முதல்வர் படைப்பகங்கள் தமிழகம் முழுதும் உருவாக்கப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்காக ரூ.28,227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பேருந்து நிலையங்கள், குடியிருப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.6045 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஊரக வளர்ச்சி: தமிழகத்தில் 2030-ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளை அமைத்து குடிசைகளே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு கலைஞர் கனவு இல்லம் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் இதுவரை 1.71 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மேலும் 29 ஆயிரம் வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் கூடுதலாக 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

இத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.28,687 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 38,62,919 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3397 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1996 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வசதித் துறைக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கீடு

வீட்டு வசதி மற்​றும் நகர்​புற வளர்ச்​சிக்கு ரூ.7,547 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இடைக்​கால பட்​ஜெட்​டில் கூறி​யிருப்​ப​தாவது: பொருளா​தா​ரத்​தில் நலிவுற்ற மக்​களுக்​காக 58,211 அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களின் கட்​டு

​மானப் பணி​கள் முடிவடைந்​துள்​ளன. 11,054 சிதிலமடைந்த அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் மறுகட்​டு​மானம் செய்​யப்​பட்​டுள்​ளன. இடைக்​கால பட்​ஜெட்​டில் வீட்டு வசதி மற்​றும் நகர்ப்​புற வளர்ச்​சித் துறைக்கு ரூ.7,547 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

கால்​நடை, மீன்​வளத்​ துறை: பால் பண்​ணை​கள் நவீனமய​மாக்​கலுக்​காக, கடந்த 5 ஆண்​டு​களில் ரூ.758 கோடி செல​விடப்​பட்​டுள்​ளது. இடைக்​கால பட்​ஜெட்​டில்

கால்​நடை பரா​மரிப்​பு, பால்​வளம் மற்​றும் மீன்​வளத் துறைக்கு ரூ. 4,435 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

சுற்​றுலா, அறநிலை​யத்​துறை: கடந்த 5 ஆண்​டு​களில் 12,931 கோயில்​களில் ரூ.8,100 கோடி​யில் திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டு, 4,180 கோயில்​களில் குட​முழுக்​கு​கள், ஆயிரம் ஆண்​டு​கள் பழமை​யான 84 கோயில்​களில் ரூ.425 கோடி​யில் குட​முழுக்​கு​கள் நடத்​தப்​பட்​டுள்​ளன. தமி​ழ​கத்​தில் அதி​கம் அறியப்​ப​டாத 22 சுற்​றுலாத் தலங்​களை மேம்​படுத்த ரூ.100 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்டுள்ளது. இடைக்​கால பட்​ஜெட்​டில் சுற்​றுலா துறைக்கு ரூ.1,394 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT