டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.189 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கரோனா பரவல் காரணமாக, தற்போது சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைத் தவிர்த்து தமிழகம் முழுவதும் 3,600 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் இம்மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளில்லாத ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமைகளில் கூட்டம்
இதனால், டாஸ்மாக் கடைகளில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மது வாங்க வருவோரின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக்கடைகளில் நேற்று முன்தினமும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அன்றைய தினம் மட்டும் ரூ.189.43 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையானது. சென்னை மண்டலத்தில் ரூ.22.56 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.41.67 கோடி, மதுரைமண்டலத்தில் ரூ.44.55 கோடி,சேலம் மண்டலத்தில் ரூ.41.20கோடி, கோவை மண்டலத்தில்ரூ.39.45 கோடி மதிப்பிலானமதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.