தமிழகம்

கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் ஒப்பந்த செவிலியர் பணிக்கு ஆள் எடுப்பு தீவிரம்: புதுச்சேரியில் பணியாளர் பற்றாக்குறையை சரி செய்ய முடிவு

செய்திப்பிரிவு

கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், அதை எதிர்கொள்ளும் வகையில் புதுச்சேரியில் ஒப்பந்த பணியில் செவிலியர் களை பணியமர்த்தும் நடவடிக் கையை சுகாதாரத் துறை தீவிரப் படுத்தியுள்ளது.

புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் கடந்த 2019-ம் ஆண்டு, ரூ.20ஆயிரம் ஊதியத்தில் ஒப்பந்தஅடிப்படையில் 50 செவிலியர்கள் எழுத்துத் தேர்வு மூலம் நியமிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியானது. இதற்கு பிஎஸ்சி நர்சிங்மற்றும் டிப்ளமோ நர்சிங் முடித் தவர்கள் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், எந்தத் தேர்வும் நடத்தப் படாமல், அது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது.

இதற்கிடையே கடந்த 4 மாதங் களாக புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை கிடைப்ப தில்லை என்ற புகாரும் எழுந்துள் ளது.

இதனால் தற்காலிகமாக ஊழியர்களை நியமிக்க அரசு நடவ டிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்தாண்டு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பணிக்காக ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களை, தற்போது தேர்வு செய்வது என முடிவெடுத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி (பொறுப்பு) இயக்குநர் மாணிக்க தீபன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 2019-ம் ஆண்டு இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பணிக்கு வெளியான அறிவிப்பை தொடர்ந்து, அதற்கு யாரெல்லாம் விண்ணத்தார்களோ, அவர்கள் recruitment.py.gov.in என்ற இணை யதளத்தில் உள்ள இணைய முகப்பில் (portal) வரும் 15-ம் தேதிக்குள் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதில் பதி வேற்றம் செய்யாதவர்களுக்கு செவிலியர் பணித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT