திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அனலை கிராமம் பெரியார் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஆனந்த்(26).
வாத்தலை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த இவர், நேற்று முன்தினம் பணி முடித்துவிட்டு திரும்பிய நிலையில,் நேற்று அதிகாலை வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜீயபுரம் போலீஸார் நடத்திய விசாரணையில், ஆனந்த் ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும், இதற்காக நண்பர்களிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.