கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் சாரைப்பாம்பு, நாகப்பாம்பு, கண்ணாடி விரியன் பாம்பு, மலைப்பாம்பு என மொத்தம் 34 பாம்புகள் உள்ளன. தற்போது கரோனா தொற்று அச்சத்தின் காரணமாக, உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கண்ணாடி விரியன் பாம்பு நேற்று முன்தினம் 33 குட்டிகளை ஈன்றது. பூங்கா ஊழியர்கள் 33 குட்டிகளையும், தனியிடத்தில் வைத்து பராமரித்தனர். இதுதொடர்பாக பூங்கா இயக்குநர் செந்தில்நாதன் கூறும்போது, ‘கண்ணாடி விரியன் பாம்பு விஷத்தன்மை கொண்டது. மே முதல் நவம்பர் வரை இதன் இனப்பெருக்க காலமாகும். அதிகபட்சமாக 45 குட்டிகள் வரை ஈனும். தற்போது ஈன்றுள்ள 33 குட்டிகளும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன’ என்றார்.