தமிழகம்

தமிழக-இலங்கை மீனவர்களிடையே கடலில் போர் வெடிக்கும் அபாயம்: யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதுவரிடம் இலங்கை மீனவர்கள் மனு

செய்திப்பிரிவு

இலங்கை தமிழ் மீனவர்களையும், தமிழக விசைப்படகு மீனவர்களை யும் மோதவிட்டு வேடிக்கை பார்த்தால், விரைவில் இருநாட்டு மீனவர்களிடையே கடலிலேயே போர் ஏற்படலாம் என யாழ்ப் பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதர் என்.நடராஜ னிடம் இலங்கை மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை வடமாகாணங்களைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகளின் அவசரக் கூட்டம் கடந்த 17-ம் தேதி நடை பெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக மீனவர் எல்லை தாண்டும் பிரச்சி னைக்கு ஆக்கப்பூர்வ நடவடிக் கைக்கு வலியுறுத்தி 23-ம் தேதி யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து, நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்ட முடிவில் மீனவர்கள் பேரணியாகச் சென்று, யாழ்ப் பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி ஏ.நடராஜனிடம் மனு அளித்தனர். இம்மனுவில் இலங்கை தமிழ் மீனவர்களையும், தமிழக விசைப்படகு மீனவர்களை யும் மோத விட்டு வேடிக்கை பார்த்தால், கடலிலேயே இலங்கை-தமிழக மீனவர்களிடையே போர் ஏற்படலாம். எனவே, இருநாட்டு மீனவர் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந் தது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதர் என்.நடராஜனிடம் புகார் மனு அளிக்கும் மீனவர்கள்.

தமிழக மீனவர்கள் அக். 6 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் செவ்வாய்க்கிழமை காலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைப்பிடித்தனர். சிறைப்பிடிக்கப்பட்ட 15 பேரும் காங்கேசன் துறையில் இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் விசாரணைக்குப் பின்னர் புதன்கிழமை மாலை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அக். 6-ம் தேதி வரையிலும் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 15 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT