தமிழகம்

கரோனா பணியில் மருத்துவர்கள் மரணம்: மரணங்களை தடுப்பதற்கான வழி மறைப்பது அல்ல: ஸ்டாலின் விமர்சனம் 

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தடுப்புப்பணியில் 196 மருத்துவர்கள் இந்திய அளவில் உயிரிழந்திருப்பது குறித்து தகவல் வந்துள்ளது, இவர்களில் எத்தனை பேர் தமிழ்நாட்டில் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவிப்பாரா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியின் விவரம் வருமாறு:
“கரோனா காலத்தில் தினமும் பல மருத்துவர்கள் உயிரிழந்து வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரை இந்தியாவில் மரணம் அடைந்த மருத்துவர்கள் 175 பேர் என்றும் அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 43 பேர் என்றும் செய்தி வந்தது.

அதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்தார். இந்தியா முழுவதும் இதுவரை 196 மருத்துவர்கள் இறந்துள்ளதாக இன்று ஐ.எம்.ஏ தகவல் தந்துள்ளது.

இவர்களில் எத்தனை பேர் தமிழக மருத்துவர்கள் என்பதை அமைச்சர் அறிவிப்பாரா? மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT