பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க 91502-50665 என்றபிரத்யேக செல்போன் எண் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு, சென்னை ஆயிரம் விளக்கில் செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரும் இதில், இணைந்து செயல்படுகின்றனர்.
அம்மா ரோந்து வாகனம் மூலம் ரோந்து பணியையும் மேற்கொள்கின்றனர். மேலும் இப்பணி சிறந்த முறையில் மக்களை சென்றடையவும், உடனடியாக குறைகளை களையவும் தற்போது புதிதாக 91502-50665 என்ற செல்போன் எண் வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக இந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.