மதுரையிலிருந்து திருநெல்வேலி சென்ற தமிழக முதல்வர் பழனிசாமி விருதுநகரில் இன்று காலை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் மற்றும் கரோன நோய் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று பங்கேற்கிறார்.
இதற்காக மதுரையில் இருந்து கார் மூலம் திருநெல்வேலி சென்ற தமிழக முதல்வர் பழனிசாமியை விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல்சூரம்பட்டி விலக்கில் பால்வளத்துறை அமைச்சர் தகே.டி.ராஜேந்திரபாலாஜி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள், சந்திரபிரபா எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டு முதல்வரை வரவேற்றனர்.
அதன் பின்னர் தமிழக முதல்வர் பழனிசாமி திருநெல்வேலி புறப்பட்டுச் சென்றார்.