கோவை பூம்புகார் விற்பனை மையத்தில், செல்போன் செயலி மூலம் பொருட்களை காணும்முறை குறித்து விளக்கப்படுகிறது. படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

பிரத்யேக செல்போன் செயலி உருவாக்கம்: வாடிக்கையாளர்களை கவர நவீன தொழில்நுட்பத்தை புகுத்தும் பூம்புகார்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) வாடிக்கையாளர்களைக் கவர பிரத்யேக செல்போன் செயலியை உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் 16 இடங்களில் பூம்புகார் விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது கரோனா வைரஸ் அச்சம் காரணமாக, வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை குறைந்து, வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வர்த்தகத்தை மேம்படுத்த முதல்முறையாக செல்போன் செயலி, இணையதள லிங்க் ஆகியவற்றை இந்நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து பூம்புகார் நிறுவன சென்னை தலைமையிட நிர்வாகப் பிரிவு கண்காணிப்பாளர் ரொனால்ட் செல்வஸ்டின் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறிய தாவது:

‘பூம்புகார் ஏஆர்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள பிரத்யேக செயலியை, ஆன்ட்ராய்டு, ஐபோன்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த செயலியில், பூம்புகார் நிறுவன தகவல்கள், விற்பனைப் பொருட்களின் புகைப்படங்கள், விவரம் இடம்பெற்றுள்ளன. விருப்ப மானதை தேர்வு செய்து, ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம்.

வாங்க நினைக்கும் பொருளை, நேரில் பார்ப்பதுபோலவே தத்ரூப மாக, 360 டிகிரி கோணத்தில் காண்பதே இச்செயலியின் சிறப்பம்சம். குறிப்பிட்ட பொருளை நமதுவீட்டில் எப்படி வைக்கலாம் என்ப தையும் தொழில்நுட்ப உதவியுடன் வைத்து, முடிவு செய்யலாம்.

இதேபோல, பூம்புகார் இணையதளப் பக்கத்தில் பிரத்யேக லிங்க் அளிக்கப்பட்டுள்ளது. ‘ஹெட்கியர்’ என்ற கருவியை முகத்தில் மாட்டிக்கொண்டு, அந்த லிங்க்கில் சென்றுபார்த்தால், விற்பனைமையத்துக்கு நேரடியாகச் சென்று பொருட்களை காண்பதுபோல உணரலாம்.

தங்களுக்குத் தேவையான பொருட்களை தேர்வு செய்து கொள்ளலாம். விற்பனை மையத் துக்கு நேரடியாக வரமுடியாத வாடிக்கையாளர்களுக்கு இந்த முறைகள் பயனுள்ளதாக இருக்கும். செல்போன் செயலி, இணையதள லிங்க் ஆகியவை விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

தற்போது 100-க்கும் மேற்பட்ட பொருட்களின் விவரங்கள் செயலியில் பதிவிடப் பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். டி.ஜி.ரகுபதி

SCROLL FOR NEXT