தமிழகம்

மழைக்கால நோய் பாதிப்புகளை தடுக்கவும் தமிழக அரசு தயார்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக 1 லட்சத்து18,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் விளங்குகிறது. இத்தகைய கரோனா தடுப்பு பணிகளுக்கு இடையே, மழைக்காலத்தில் ஏற்படும் டெங்கு போன்ற நோய் பாதிப்புகளைத் தடுக்கவும் தமிழக அரசு தயாராக உள்ளது என்றார்.

ஆய்வின்போது, சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஆட்சியர் பி.உமா மகேஸ்வரிஉள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT