தேசியக் கொடி ஏற்றப்பட உள்ள தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் வெள்ளை அடிக்கும் பணி நடக்கிறது. 
தமிழகம்

சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி: தலைமைச் செயலகத்தை சுற்றி 3 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம்

செய்திப்பிரிவு

சுதந்திர தின விழா ஒத்திகையையொட்டி தலைமைச் செயலகத்தை சுற்றி 3 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படும். இந்த தினத்தில் தமிழக முதல் வர் கோட்டையில் கொடியேற்றுவார். இந்த நிகழ்ச்சியை யொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

இதையொட்டி, வரும் 8, 10, 13-ம் தேதிகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி தலைமைச் செயலகத்தை சுற்றி இந்த 3 நாட்களும் காலை 6.30 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி உழைப்பாளர் சிலை முதல் போர் சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வடக்கு பகுதி வரை அமையப் பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடி மரச்சாலை ஆகிய சாலை களில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மேலும் சில இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT