இ-பாஸ் நடைமுறையை நிறுத்தா விட்டால் மாநில அளவில் போராட் டம் நடத்தப்படும் என்று திமுக வர்த்தகர் அணி அறிவித்துள்ளது.
திமுக வர்த்தகர் அணி கூட்டம் கவிஞர் காசி முத்து மாணிக்கம் தலைமையில் இணையவழி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கோயம்பேடு சந்தையை உடனடி யாக திறக்க வேண்டும். இ-பாஸ் முறை வேண்டாம் என்று மத்திய அரசும், கர்நாடக அரசும் சொன் னாலும் வருமானத்துக்கு ஆசைப் பட்டு இ-பாஸை தொடர்வது நல்லதல்ல.
இ-பாஸ் நடைமுறையை நிறுத் தாவிட்டால், திமுக தலைவரின் அனு மதியைப் பெற்று மாநிலம் தழுவிய போராட்டத்தை வர்த்தகர் அணி சார்பில் நடத்துவோம்.
போக்குவரத்து பேருந்தை சமூக இடைவெளியுடன் நடத்தினால், முகக் கவசத்துடன் அனுமதித்தால் மக்களுக்கு எரிபொருள் மிச்சப் படும். முகக் கவசம், கையுறை, கிருமி நாசினிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்டன.