காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் அமைந்துள்ள தற்காலிக சந்தையை ஆய்வு செய்கிறார் ஆட்சியர் பொன்னையா. உடன் சார் ஆட்சியர் சரவணன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி. 
தமிழகம்

பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில் ஆட்சியர் ஆய்வு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் பெரு நகராட்சியில்பச்சையப்பன் ஆடவர் கல்லூரிமைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையைஆட்சியர் பொன்னையா நேரில் ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறுசிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு ஏதுவாக பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்த காய்கறி சந்தையை ஆட்சியர் நேற்று ஆய்வு செய்தார். முகக்கவசம், கையுறை ஆகியவற்றை கட்டாயம்அணியுமாறும், சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுமாறும் கடை உரிமையாளர்களிடம் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது சார் ஆட்சியர் சரவணன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வட்டாட்சியர் பவானி உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT