தமிழகம்

சென்னை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்: அரங்குக்குள் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்ல அனுமதி இல்லை

செய்திப்பிரிவு

சென்னையில் நேற்று தொடங்கிய சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக் காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்திருந்தனர். மாநகர கூடுதல் ஆணையர் ஆபாஷ் குமார் தலைமையில் சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாநாடு நடைபெறும் நந்தம் பாக்கம் வளாகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டி ருந்தது. நடமாடும் டெம்போ வாக னத்தில் கண்காணிப்புக் கேமரா பொருத்தி மாநாட்டு வளாகம் கண் காணிக்கப்பட்டது. 12 பிரிவு வெடி குண்டு செயலிழப்பு போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் மாநாட்டு வளாகத்தை தீவிரமாக சோதனை யிட்டனர். வளாகத்துக்குள் நுழையும் 4 வழிகளிலும் அமைக்கப்பட்டுள்ள மெட்டல் டிடெக்டர், நவீன ஸ்கேனர் மூலம் சோதனை செய்த பிறகே அனைவரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அரங்கிற்குள் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.

விமான நிலையம், விருந்தினர்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிகள், மாநாட்டு அரங்கம் செல்லும் வழிகள் முழுவதும் போலீஸார் குவிக்கப் பட்டிருந்தனர். முதல்வர் வரும் போதும், நிகழ்ச்சி முடிந்து செல்லும் போதும் சாலையில் 5 நிமிடம் மட்டுமே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேசமயம் மாநாட்டு திடல் செல்லும் சாலையில் வழக்கத்தைவிட அதிக மான வாகன போக்குவரத்து இருந்த தாலும், மாநாட்டையும், முதல்வரை யும் பார்ப்பதற்காகவும் அதிக எண்ணிக்கையில் மக்கள் திரண்ட தாலும் சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முக்கிய இடங்களில் மேடை அமைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன. இதில், தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், கேரளம், ஆந்திர மாநில கலைஞர்களும் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். முதல்வர் செல்லும் பாதைகளில் வழிநெடுக அதிமுக தொண்டர்கள் திரண்டு நின்று மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையம், விருந்தினர்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிகள், மாநாட்டு அரங்கம் செல்லும் வழிகள் முழுவதும் போலீஸார் குவிக்கப் பட்டிருந்தனர்.

SCROLL FOR NEXT