தமிழகம்

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பூமி பூஜை: நெல்லையில் சிறப்பு வழிபாடு

அ.அருள்தாசன்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பூமி பூஜை விழா நடைபெற்றதை முன்னிட்டு திருநெல்வேலியில் விஷ்வஹிந்து பரிஷத் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெறும்போது 108 முறை ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம் என்று ஜெபிக்கவும், அன்று மாலை 6 மணிக்கு அகல்விளக்குகளால் வீடுகளை அலங்கரித்து ராமனின் நாமம் நிலைபெற்றிருக்க செய்ய வேண்டும் என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகோள் விடுத்திருந்தது.

அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் ரெட்டியாபட்டி, கருப்பந்துரை, கொக்கிரகுளம், பேட்டை தச்சநல்லூர் போன்ற பகுதிகளில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

ராம பக்தர்கள் சார்பாக பஜனை , ஆடல் பாடல் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் ராமர் கோயில், அதன் வரலாறு, இதற்காக பலிதானம் ஆனவர்களின் தியாகம் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT