தமிழகம்

ரூ. 315 கோடியில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள்: அமைச்சர் உதயகுமார் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 121 இடங்களில் ரூ. 315 கோடியில் பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் கட்டப்பட்டு வருவதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று அதிமுக உறுப்பினர் ம.சக்தி (சீர்காழி) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர், ‘‘தமிழகத்தில் புயல் போன்ற இயற்கை பேரழிவின் போது மட்டுமல்லாது அனைத்து காலங்களிலும் பயன்படுத்தும் வகையில் 121 இடங்களில் பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் கட்ட ரூ. 315 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 32 மையங்களுக்கு கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. மீதமுள்ள மையங்களுக்கும் கட்டிடம் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’’ என்றார்.

SCROLL FOR NEXT