தமிழகம்

உதவி ஆய்வாளருக்கு கரோனா: குளத்தூர் காவல் நிலையம் மூடப்பட்டது

எஸ்.கோமதி விநாயகம்

குளத்தூர் காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டது.

குளத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளருக்கு காய்ச்சல் இருந்ததைத் தொடர்ந்து அவருக்கு கடந்த 3-ம் தேதி சளி மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.

இதில், காவல் ஆய்வாளருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், குளத்தூர் காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, காவல் நிலையம் மூடப்பட்டது. காவல் நிலையம் 3 நாட்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஒரு நாளில் குளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 11 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதே போல், கயத்தாறு பகுதியில் கடந்த 2 நாட்களில் ஒரு மருத்துவர்ஒரு டாக்டர், தெற்கு இலந்தைகுளம் கிராமத்தில் ஒருவருக்கும் என கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் 24 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மருத்துவக் குழுவினர் முகாமிட்டு கிராம மக்களிடம் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்து வருகின்றனர்.

இதே போல், கயத்தாறு காவல் நிலைய பெண் காவலருக்கும், வட்டாட்சியர் அலுவலக தற்காலிகப் பணியாளருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவில்பட்டி நகரப்பகுதியில் 9 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT