திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை திட்டங்கள் குறித்த பதாகையை நேற்று தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் விசயராகவன் திறந்து வைத்தார். 
தமிழகம்

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை திட்டங்களின் பதாகை திறப்பு

செய்திப்பிரிவு

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை திட்டங்கள் குறித்த பதாகையை நேற்று தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் விசயராகவன் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்வளர்ச்சித் துறையின் திட்டங்களான, விருதுகள் வழங்குதல், சிறந்த நூல் பரிசுப் போட்டி, நூல் வெளியிட நிதியுதவி, திருக்குறள் முற்றோதல் பரிசு, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஆகிய விவரங்கள் அடங்கிய பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதனை நேற்று தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் விசயராகவன் திறந்து வைத்தார்.

அதுமட்டுமல்லாமல், அரசு அலுவலகங்களில் நாள்தோறும் ஒருதிருக்குறள் எழுதப் பெறுதல்வேண்டும் என்ற அரசாணையின்படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முகப்பில்வைக்கப்பட்டுள்ள கரும்பலகையில் நாள்தோறும் திருக்குறளோடு, கலைச்சொல்லும் எழுதப்பட்டு வருகிறது என, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT