தமிழகம்

காஞ்சி, செங்கல்பட்டில் 150 போலீஸாருக்கு கரோனா தொற்று: காவல் துறையினர் அச்சம்

செய்திப்பிரிவு

காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் 150போலீஸாருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது மாவட்ட காவல் துறையினர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்புஎண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டுமாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உட்பட 70 போலீஸாரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 போலீஸாரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்ததை அடுத்து, 124 போலீஸார் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 26 போலீஸார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்து வருவதில் போலீஸாருக்கு கரோனா தொற்று அதிகரிப்பதால் காவல் துறை வட்டாரத்தில் கலக்கமும், அச்சமும் ஏற்பட்டுள்ளது

SCROLL FOR NEXT