மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கக்கோரி மனு அளித்தனர். 
தமிழகம்

ஆகஸ்ட் 22-ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி கேட்டு இந்து முன்னணி ஆட்சியரிடம் மனு 

எஸ்.ஸ்ரீனிவாசகன்

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டு இந்து முன்னணி சார்பில் மதுரை மாவட்ட தலைவர் எஸ்.அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்போக்குவரத்துக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. பால் மற்றும் மருந்துகள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுவதற்கும் தடையுள்ளதால் கோயில்கள் திறக்கப்படவில்லை. கிராமப்புறங்களில் உள்ள சிறு, சிறு கோயில்கள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் ஊரடங்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறவுள்ளது. கடந்த காலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டு இந்து முன்னணி சார்பில் மதுரை மாவட்ட தலைவர் எஸ்.அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

அம்மனுவில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகரை வழிபடவும், கரோனாவை விரட்டிடவும் யாக பூஜை செய்யவும் மதுரை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பாக நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

SCROLL FOR NEXT