தமிழகம்

ராஜபக்சவுக்கு தண்டனை: மத்திய அமைச்சர் உறுதி

செய்திப்பிரிவு

இலங்கையில் ஜனநாயகரீதியில் தோற்கடிக்கப்பட்ட ராஜபக்சவுக்கு சட்டரீதியில் தண்டனை பெற்றுத் தர மத்திய அரசு முயற்சி எடுக்கும் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

முன்னாள் பிரதமர் என்ற முறையில் இந்திரா காந்திக்கு மரியாதை அளிக் கப்படும். அதேசமயம், மகாத்மா காந்தியை புறந்தள்ளிவிட்டு மற்றவரை முன்நிறுத்துவதை ஏற்க முடியாது.

தமிழர்களை அநியாயமாகக் கொன்று குவித்த ராஜபக்சவுக்கு ஆதர வாக காங்கிரஸ் துணை போனது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தமிழர்களுக்கு ஏதிராக இருந்தன. இருப்பினும், இலங்கையில் ஜனநாயக ரீதியில் மக்களால் ராஜபக்ச மற்றும் அவரது கூட்டத்தினர் தோற் கடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சட்டரீதியில் தண்டனை பெற்றுத் தர மத்திய அரசு முயற்சி எடுக் கும்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT