தமிழகம்

கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் 114 இளநிலை உதவியாளர்கள் நியமனம்: துணை முதல்வர் ஓபிஎஸ் ஆணைகளை வழங்கினார்

செய்திப்பிரிவு

கருவூலம் மற்றும் கணக்குத் துறைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 114 இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

கடந்த 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கருவூலம் மற்றும் கணக்குத் துறை, நிதித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆயிரத்து 78 பணியிடங்களில் தற்போது 3 ஆயிரத்து 422 பேர் பணியாற்றி வருகி்ன்றனர். இவர்களில் கணக்கர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்பப்படுகின்றன.

கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் 2018-19 மற்றும் 19-20-ம் ஆண்டுகளுக்கான 114 இளநிலை உதவியாளர்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக 12 பேருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன், கருவூலக் கணக்குத் துறை ஆணையர் சி.சமயமூர்த்தி, கூடுதல் இயக்குநர் சித்ரா ஜான் பெர்னாண்டோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT