தமிழகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.192 உயர்வு

செய்திப்பிரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு பவுனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.19 ஆயிரத்து 880-க்கு விற்கப்பட்டது.

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை நேற்று திடீரென அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2,461 ஆக இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.2,485 ஆக அதிகரித்தது. எனவே நேற்று ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 880-க்கு விற்கப்பட்டது.

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘சர்வதேச அளவில் விலை அதிகரிப்பு, உள்ளூரில் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது’’என்றார்.

SCROLL FOR NEXT