சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்கு சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்களை அழைத்து கவுரவிக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘நம்நாட்டின் 74-வது சுதந்திர தினவிழாவை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்துவித கல்வி அலுவலகங்கள். பள்ளிகளில் தனிநபர் இடைவெளியைப் பின்பற்றி கொண்டாட வேண்டும்.
மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கையின் முன்களப்பணியாளர்களாக செயல்படும் மருத்துவர்கள், சுகாதார மற்றும் தூய்மைப்பணியாளர்களின் சேவையை பாராட்டும் விதமாக அவர்களை சுதந்திர தினவிழாவுக்கு அழைத்து சிறப்பிக்க வேண்டும். அதேபோல், கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களையும் விழாவுக்கு அழைக்கலாம்’’ என்று கூறியுள்ளார்.