‘பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தின்கீழ், 5 மாதங்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக தமிழகத்துக்கு 8.93 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களும், புதுச்சேரிக்கு 3 ஆயிரத்து 171 மெட்ரிக் டன் அரிசியும் இந்திய உணவுக் கழகம் ஒதுக்கி உள்ளது.
‘பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தின்கீழ், பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி,கோதுமை இலவசமாக வழங்கும் திட்டத்தை மேலும் 5 மாதங்கள் அதாவது, ஜூலை முதல் நவம்பர் வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 1.11 கோடி பயனாளிகள் 5 கிலோ அரிசி, கோதுமை பெறுவார்கள். இதற்காக, தமிழகத்துக்கு 8.93 லட்சம் மெட்ரிக் டன்களும், (8.54 லட்சம் மெட்ரிக் டன் அரிசிமற்றும் 39 ஆயிரத்து 307 மெட்ரிக்டன் கோதுமை) மற்றும் புதுச்சேரிக்கு 3 ஆயிரத்து 171 மெட்ரிக் டன் அரிசியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், ஜூலை மற்றும் ஆகஸ்ட்மாதங்களுக்கான 3.56 லட்சம் மெட்ரிக் டன்னில் 2.54 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உணவுக் கழகம் தெரிவித் துள்ளது.