விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 253 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதன்மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,118 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை சுமார் 5 ஆயிரம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 2,800-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 85 ஆக உயர்ந்துள்ளது