போனஸ் பேச்சுவார்த்தைகள் அடுத் தடுத்து தோல்வியில் முடிந்ததால் 5-வது நாளாக நேற்றும் கேர ளத்தில் உள்ள மூணாறில் தேயி லைத் தொழிலாளர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
மூணாறில் உள்ள டாடா நிறு வனத்துக்குச் சொந்தமான கே.டி.ஹெச்.பி. தேயிலைக் கம்பெனி யில் சுமார் 14 ஆயிரம் நிரந் தர தொழிலாளர்களும் சுமார் 90 ஆயிரம் முறைசாரா தொழி லாளர்களும் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும் பகுதியி னர் தமிழர்கள். நிரந்தர தொழிலாளர் களுக்கு நாளொன்றுக்கு ரூ.231 ஊதியமாக வழங்கப்படுகிறது. இதை ரூ.500-ஆக உயர்த்தக் கோரி தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
10 சதவீத போனஸ்
இந்நிலையில், கடந்த 5-ம் தேதி தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு 10 சதவீதம் போனஸ் வழங் கப்படும் என கே.டி.ஹெச்.பி. நிர்வாகம் அறிவித்தது. தொழி லாளர்கள் இதை ஏற்க மறுத்தனர். தொழிற்சங்கங்கள் கம்பெனிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டும் தொழிலாளர்கள், கடந்த 6-ம் தேதியிலிருந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக காங் கிரஸ் தொழிற்சங்கமான எஸ்.ஐ.பி.டபிள்யூ. அலுவலகம் மீதும் அதன் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஏ.கே.மணியின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத் தப்பட்டது.
மூணாறில் நிலைமை மோசமடைந்ததால் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஷிபு பேபி ஜான் தலைமையில் திருவனந்த புரத்தில் நேற்று முன்தினம் பேச்சு வார்த்தை நடந்தது.
இதுவும் பலன் தராததால் நேற்று 5-வது நாளாக தொழிலாளர்களின் போராட்டம் வலுத்தது. இதனிடையே, போராட் டங்களில் ஈடுபட்ட தோட்டத் தொழி லாளர்கள் 18 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.
போராட்டம் குறித்து ‘தி இந்து’விடம் பேசிய கேரளத் தமிழர் கூட்டமைப்பின் அமைப்பாளர் அன்வர் பாலசிங்கம், “138 ஆண்டு கால தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சரித்திரத்தில் முதல்முறையாக தொழிற் சங்கங்களை ஒதுக்கிவிட்டு தொழிலாளர்களே போராட்டத் தில் இறங்கியுள்ளனர். தொழிற் சங்கங்கள் அனைத்துமே கம்பெனி களிடம் விலைபோய் விட்டதால் தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
இந்தப் போராட்டம் கேரளத்திலுள்ள தேயி லைத் தோட்டத் தமிழர்கள் இழந்து நிற்கும் உரிமைகள் அனைத்தையும் பெறுவதற்கான போராட்டமாக மாறிவருகிறது’’ என்று கூறினார்.
எஸ்.ஐ.பி.டபுள்யூ தொழிற்சங் கத்தின் தலைவர் ஏ.கே.மணி கூறும்போது, “கடந்த காலங்களில் லாபத்தின் அடிப்படையில் கே.டி.ஹெச்.பி. கம்பெனி போனஸ் வழங்கியது. அதன்படி அதிக பட்சமாக 20 சதவீதம் வரை போனஸ் கொடுத்துள்ளனர்.
13-ம் தேதி பேச்சுவார்த்தை
கடந்த ஆண்டு லாபம் ரூ.15 கோடியாக இருந்ததால் 19 சதவீதம் கொடுத்தனர். ஆனால் இந்த ஆண்டு, ரூ.5.11 கோடிதான் லாபம். அதனடிப்படையில் பார்த் தால் 7 சதவீதம்தான் போனஸ் கொடுக்க முடியும். ஆனால், 10 சதவீதம் தர சம்மதிக்கும் கம்பெனி, ‘வங்கியில் ஓ.டி. பெற்று எஞ்சிய 10 சதவீதத்தை முன்பணமாக வேண்டுமானால் தருகிறோம்’ என்கிறது. அதை நாங்கள் ஏற்கவில்லை.
இன்று (வியாழன்) நடந்த பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. மூணாறு பகுதி யில் தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால் பேச்சுவார்த் தையை 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது அரசு’’ என்று தெரிவித்தார்.